தேங்காய்களை அறுவடை செய்ய குரங்கு உழைப்பை நம்பியிருப்பதாகக் குற்றம் சாட்டி ஒரு இரகசிய விசாரணையை பேட (PETA) நிறுவனம் வெளியிட்டதை அடுத்து, கோஸ்ட்கோ ஒரு தாய் சப்ளையரிடமிருந்து தேங்காய் பாலை வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.
வியாழக்கிழமை ஒரு செய்திக்குறிப்பில், விலங்கு உரிமைகள் அமைப்பு பேட (PETA), தாய்லாந்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் சாய்கா “சங்கிலியால் பிணைக்கப்பட்ட குரங்குகளை தேங்காய் எடுக்கும் இயந்திரங்களாக” பயன்படுத்துவதாக இரகசிய விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, கோஸ்ட்கோ இந்த தயாரிப்பை அகற்றுவதாகக் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் ஆசியாவின் விசாரணையை இந்த அமைப்பு மேற்கோளிட்டு, “ஒவ்வொரு குரங்கு பண்ணையிலும், ஒவ்வொரு குரங்கு பயிற்சி நிலையத்திலும், குரங்கு உழைப்பைப் பயன்படுத்தும் ஒவ்வொரு தேங்காய் எடுக்கும் போட்டிகளிலும் குரங்குகள் கொடுமைப் படுத்ததப்படுவதாக கூறப்படுகிறது.”
விசாரணையின்படி, தாய்லாந்து முழுவதும் எட்டு வெவ்வேறு பண்ணைகளில் குரங்குகள் ஒரு நாளைக்கு சுமார் 1,000 தேங்காய்களை எடுக்க கட்டாயப்படுத்த படுகின்றன.