கடந்த வருடம் ட்விட்டர் அரசியல் சம்பந்தமான அனைத்து விளம்பரங்களையும் தங்களது தளத்தில் இருந்து நிறுத்துவதாக அறிவித்தது. ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, அரசியல் செய்திகளின் பரவலை அரசியல் வாதிகள் “சம்பாதிக்க வேண்டும், காசு கொடுத்து வாங்கக்கூடாது” என்று தான் நம்புவதாக கூறினார். ஆனால் அவர்களால் அரசியல்வாதிகளின் ட்விட்டர் பதிவுகளை ஒவ்வொன்றாக உண்மை பொய் பார்த்து அனுமதிப்பதா என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அதிபர் டிரம்ப் மிரட்டினார்
அண்மைக்காலத்தில் கோவிட் -19 சம்பந்தமான பதிவுகளை ட்விட்டர் உண்மைத்தன்மை பார்த்து தங்களது தளத்தில் அனுமதிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பாவிக்க தொடங்கியது.
அரசியல் செய்திகளின் பரவலை அரசியல் வாதிகள் “சம்பாதிக்க வேண்டும், காசு கொடுத்து வாங்கக்கூடாது”
ஆனால் டிரம்ப்பின் அண்மைக்கால ட்வீட் ஒன்றினை உண்மைத்தன்மை பார்த்து ட்விட்டர் தமது தளத்தில் அனுமதித்ததையடுத்தே கோபங்கொண்ட டிரம்ப் அனைத்து சமூக ஊடகங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்க போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.