சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் நஸ்ராட்ப்பேட்டை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சித்ராவின் தந்தை திருவான்மியூரை சேர்ந்த காமராஜ் காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் கொடுத்த புகாரை அடுத்து உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.
விடுதி அறையில் சித்ராவுடன் தங்கியிருந்த கணவர் ஹேமநாத் மற்றும் அந்த அறையை மாற்று சாவி மூலம் திறந்த விடுதி ஊழியர் கணேஷ் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சித்ராவின் மொபைல் போனையும் க்ரைம் பிரென்ச் கைப்பற்றி ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என ஆராய்ந்து வருகின்றது.
சித்ராவின் நண்பர்கள் அவர் தற்கொலை செய்யுமளவிற்கு கோழையல்ல என கவலையையும் , ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் தங்களது வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.