கனடாவின் அவசரகால உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி

0
1575
Canada_Emergency_Response_Benefit_How_to_apply_1_Tamil_News

இங்கே தரப்பட்ட தகவல்களில் எதாவது பிழைகள்  இருப்பின் ஆசிரியர் பீடம் பொறுப்பல்ல. இது தகவல் மட்டுமே.

Canada Emergency Response Benefit – How to apply

COVID-19 காரணமாக வேலை இழந்த  கனடா மக்களுக்கு நேராக பணத்தை வழங்கும் புதிய திட்டத்துக்காக கனடாவின் மத்திய அரசு 24 பில்லியனை வழங்கியுள்ளது.

இதனூடாக நான்கு மாதங்களுக்கு மாதத்திற்கு $ 2,000 டாலர் வரைபெற்றுக்கொள்ளலாம் . வேலைவாய்ப்பு காப்பீடு (EI) உடன் ஒப்பிடும்போது இதற்கு விண்ணப்பிக்க குறைவான  கட்டுப்பாடுகளே உள்ளன, இது பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்க உதவித்தொகையைப் பெறுவதற்கான வழியாகும்.

விண்ணப்பங்கள் ஏப்ரில் 6 ம் திகதியிலிருந்து ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும்.

கொரோனாவால் வேலையிழந்த அல்லது வருமானம் நின்ற அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏப்ரில் 6 ம் திகதியிலிருந்து ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிக விவரங்களுக்கு கீழே தரப்பட்ட வெப்சைட் இல் பார்க்கவும். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் நீங்கள் பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் ஏற்கனவே வேலைவாய்ப்பு காப்பீடு (EI) உதவித்தொகை பெற்றுக்கொடுப்பவர் ஆயின் நீங்கள் இதற்கு  விண்ணப்பிக்க இயலாது.

https://www.canada.ca/en/services/benefits/ei/cerb-application.html

 

இதனூடாக நான்கு மாதங்களுக்கு மாதத்திற்கு $ 2,000 டாலர் வரைபெற்றுக்கொள்ளலாம் .

யார் விண்ணப்பிக்கலாம் 

இந்த உதவிப்பணம் வேளை செய்யும் அல்லது வேலை செய்தவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் , ,

  1. கனடாவில் வசிக்கும்  15 வயதிர்க்கு மேட்பட்டவர்கள்
  2. COVID-19 காரணமாக வேலை செய்வதை நிறுத்தியவர்கள் மற்றும் தாமாக வேலையை விட்டு வெளியேறாதவர்கள் அல்லது EI வழக்கமான நலன்களுக்கு தகுதியுடையவர்கள் (நீங்களாக வேலையிலிருந்து நின்றிருக்க கூடாது)
  3. 2019 ஆம் ஆண்டில் அல்லது அவர்கள் விண்ணப்பித்த தேதிக்கு 12 மாதங்களுக்கு முன்னர் குறைந்தது $ 5,000 வருமானம் பெற்றவர்கள்
  4. கடந்த நான்கு வார காலப்பகுதியில் குறைந்தது 14 நாட்களுக்கு வேலை அல்லது சுய வேலைவாய்ப்பு வருமானம் இல்லாமல் இருப்போர் அல்லது . அடுத்தடுத்த நன்மை காலங்களுக்கு, வேலைவாய்ப்பு வருமானம் இருக்காது என்று எதிர்பார்ப்போர்.

 

கனடாவின் அவசரகால உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள்

நீங்கள் பிறந்த மாதம் – Month of Birth விண்ணப்பிக்க வேண்டிய நாள் – Date to Apply
தை ,மாசி , பங்குனி திங்கள் – April 6
சித்திரை , வைகாசி, ஆனி செவ்வாய் – April 7
ஆடி , ஆவணி ,புரட்டாதி புதன் – April 8
ஐப்பசி , கார்த்திகை , மார்கழி வியாழன் – April 9
எதுவென்றாலும் வெள்ளி , சனி ,ஞாயிறு –  April 10,11,12

 

Canada_Emergency_Response_Benefit_How_to_apply_Tamil_News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here