கோவிட் தொற்று நோயாளிக்கு அருகிலிருந்தீர்களா என கண்டறியும் ப்ளூ டூத் டெக்னாலஜியில் இயங்கும் மொபைல் ஆப் ஒன்று அடுத்த மாதத்திலிருந்து அரசாங்கத்தினால் ஒண்டாரியோ மாகாணத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.
கோவிட் – அலெர்ட் என்று அழைக்கப்படும் இந்த மொபைல் ஆப் கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் தானாக முன்வந்த சில சாப்ட்வேர் வேலை செய்பவர்களுடன் அரசாங்கமும் இணைந்து தயாரித்ததாகும்.
இது பாவனையாளர்களுக்கு அவர்கள் கோவிட் தொற்று நோயாளிக்கு அருகிலிருந்தார்களா என் கண்டறிந்து அவர்களை கோவிட் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தும்.
இதைப்போன்ற டெக்னாலஜியைப் பாவித்து ஜப்பான் மற்றும் ஜெர்மனி யில் ஏற்கனவே கோவிட் மொபைல் ஆப் தயாரித்துள்ளார்கள்.
இந்த மொபைல் ஆப் பாவனையாளர்களுடைய இடத்தினையோ,அவர்களது தனிப்பட்ட தகவல்களையோ, அவர்களது மருத்துவ பதிவுகளையோ சேகரித்து வைக்காது என கனடா அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இது ப்ளூ டூத் டெக்னாலஜியில் வேலை செய்வதால் இந்த தகவல்கள் தேவையில்லை. இந்த மொபைல் அப்பை நீங்கள் உங்களது கைத்தொலைபேசியில் பதிவு இறக்கம் செய்யலாம் செய்யாமல் விடலாம். உங்களது விருப்பம். ஆனால் பதிவு இறக்கம் செய்வது நல்லது என ஜஸ்டின் த்ருடோ தெரிவித்துள்ளார்.
இது பாவனையாளர்களுக்கு அவர்கள் கோவிட் தொற்று நோயாளிக்கு அருகிலிருந்தார்களா என் கண்டறிந்து அவர்களை கோவிட் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தும்.