தொலைக்காட்சி நடிகை சித்திரா வயது 28, சென்னை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை யாக நடித்துவந்தார் என்பது பலரும் அறிந்ததே.
இவருக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்றிருந்தது. தை மாதத்தில் திருமணமும் நடப்பதாக இருந்தது. அப்படி இருக்க தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கும் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் சென்னைக்கு அருகே உள்ள நசரேத் பேட்டையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்து படப்பிடிப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்தார். அங்குதான் தன் சேலையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.