Prince Charles tests positive for coronavirus
இளவரசர் சார்லஸ் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார் என தெரிய வந்துள்ளது. ஸ்காட்லாந்தில் சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார்.
லேசான அறிகுறிகளே பெற்றிருக்கிறார் , ஆனால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
71 வயதான வேல்ஸ் இளவரசர் “லேசான அறிகுறிகளே பெற்றிருக்கிறார் , ஆனால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார், கடந்த சில நாட்களாக வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்” என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட கிளாரன்ஸ் ஹவுஸின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி கமிலா, டச்சஸ் ஆஃப் கார்ன்வால், 72, என்பவரும் பரிசோதிக்கப்பட்டார், ஆனால் அவருக்கு வைரஸ் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றது.
இருவரும் இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள குயின்ஸ் பால்மோரல் தோட்டத்திலுள்ள தங்கள் வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். “சமீபத்திய வாரங்களில் இளவரசர் தனது பொதுப் வேலைகளில் அதிக எண்ணிக்கையிலான ஈடுபாடுகளைச் செய்ததால் யாரிடமிருந்து வைரஸைப் பெற்றார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது” என்று அரண்மனை மேலும் கூறியது.