திருகோணமலை மட்டக்களப்பு ரயில் பாதையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த சென்றுகொண்டிருந்த Meenagaya
Night Intercity express ரயில் Awukana – kalawewa பகுதியில் தடம்புரண்டதில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்ததுடன் மரத்திலாலான சிலிப்பர் கட்டைகள் என்பன உடைந்து சேதடைந்துள்ளது.
இந்த விபத்து நேற்று இரவு 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை ரயில் இன்ஜின் அங்கிருந்த பாலத்தை கடந்து செல்ல முன்னர் விபத்து ஏற்பட்டதால் தெய்வாதீனமாக பயணிகளுக்கு எந்த சேதமும் ஏற்படாது தவிர்க்கப்பட்டுள்ளது. பாலத்திலிருந்து சரிந்திருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.
ரயிலில் 250 பயணிகள் ரயிலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.