நீங்கள் பாராக் ஒபாமாவின் பொலிடிக்சை விரும்புகிறீர்களோ இல்லையோ ஒன்றை மட்டும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அவர் நிச்சயமாக குடும்ப வாழ்வை மிகவும் புரிந்து வைத்துள்ளார். அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவித பிரச்சினைகளும் இருந்ததில்லை. அத்தோடுஅவரது பெண் குழந்தைகளும் வெற்றிப்பாதையில் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறாரார்கள்.
எமது குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செடி போன்றவர்கள் . ஒருவர் ஓக் (Oak) மரமாகவோ மூங்கில் மரமாகவோ செஸ்ட்நட் (Chestnut) மரமாகவோ இருக்கலாம்.
மற்றைய பெற்றோர்கள் போல் முன்னைய ப்ரெசிடெண்ட் பாராக் ஒபாமாவும் அவரது மனைவியும் கூட குழைந்தையை வளர்ப்பதில் சில பல தவறுகள் செய்திருக்கலாம். ஆனாலும் அவரது இந்த அட்வைஸை நாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த கருத்து உங்களை சிறந்த பெற்றோர்களாக மாற்றுவது மட்டுமல்லாது சிறந்த ஒரு தலைவராகவும் மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் ரோஜா செடியை சூரியகாந்தியாக மாற்றமுடியாது.
அவர் ஒரு நேர் கானலில் சொன்னதாவது , ” எமது குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செடி போன்றவர்கள் . ஒருவர் ஓக் (Oak) மரமாகவோ மூங்கில் மரமாகவோ செஸ்ட்நட் (Chestnut) மரமாகவோ இருக்கலாம். அனைத்து மரங்களுக்கும் நீர் பாய்ச்சவேண்டும்.பசளை போட வேண்டும். சூரிய ஒளி வேண்டும். ஆனால் ஒவ்வொரு மரங்களும் வேறு வேறு பருவங்களில் கிளை விடும், பூக்கும் காய் தரும். சில மரங்கள் வளர ஐந்து ஆண்டுகள் எடுக்கலாம். சில மரங்கள் வளர பத்து ஆண்டுகள் எடுக்கலாம். அவை ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. தனித்துவமானவை. அதே போன்று தான் எமது குழந்தைகளும் . அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்களை நாம் புரிந்து கொண்டு அதட்கேற்றவாறு அவர்களை நாம் வளர்க்க வேண்டும். வித்தியாசமான மரங்களை எப்படி வித்தியாசமாக பராமரிக்கின்றோமோ அதே போன்று பிழைகளையும் நாம் வளர்க்க வேண்டும். ஒரு பிள்ளையை வளர்ப்பது போல் இன்னொரு பிள்ளையை வளர்க்க முடியாது. ஒரு பிள்ளை மிகவும் விரைவாக தானாகவே பாடத்தை கற்று கொள்ளும். இன்னொரு பிள்ளைக்கு நீங்கள் அருகில் இருந்து மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்க வேண்டி இருக்கலாம். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் நாங்கள் வித்தியாசமான அணுகு முறைகளை கையாள வேண்டி இருக்கும். நீங்கள் ரோஜா செடியை சூரியகாந்தியாக மாற்றமுடியாது. இந்த தத்துவத்தை புரிந்து கொண்டால் , வீட்டில் சச்சரவுகள் குறையும் , நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கலாம். குழைந்தைகளும் உங்கள் மேல் பிரியமுடன் இருப்பார்கள். முயற்சி செய்து தான் பாருங்களேன்.