Anjali Anjali pushpanjali Song Lyrics – Duet Movie

0
1914
Anjali_Anjali_pushpanjali_Song_Lyrics_Duet_Movie
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலிஇணைத்தது  கண்மணி
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்த துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினம் ஒரு புது பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி

கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
காதலின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
அழகியே உன்னை போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் கானா அழகுக்கு கவிதாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here