வான் தூறல்கள்
வாழ்த்துக்கள் பாட நான் மீண்டுமே
பூக்கிறேன்
நீதானடி
இனி நீதானடி
தந்தாயே வாழ்நாட்களை
தாய் நானடி
தந்தை நானடி
வழியாகிறேன்
வா என் வாகையே
பறந்து போகலாம்
திறந்த வானிலே
ஒளியாய் நான் இருப்பேன்
உயிரே வா
வானமாய் நானாகியே
சிறு வாடை தீண்டிடாமல் காப்பேன்
தோழி போல் நானாகியே
உன் தேவை தேடி தேடி சேர்ப்பேன்
தேரில்லா சிலை நான்
நீரில்லா நிலம் நான்
சரியா பிழை மொழியா
இங்கு ஏது நான் அன்பே
மரங்கள் பூக்குதே
நிறங்கள் கூடுதே உலகாய்
நீ கிடைத்தாயே
மகளாய் நான்