Pootha Kodi Pookkal Indri Thavikkindrana – பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது

0
4247
Pootha_Kodi_Pookkal_Indri_Thavikkindrana_song_lyrics

பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது

பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது

ஆல மரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது

ஆல மரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது

நாய் வளர்த்து பாலை வார்த்தால்
வாலை ஆட்டி கொள்ளும்
நம்பிப் பெத்த பிள்ளைகளோ
நன்றியினை கொல்லும்

நாய் வளர்த்து பாலை வார்த்தால்
வாலை ஆட்டி கொள்ளும்
நம்பிப் பெத்த பிள்ளைகளோ
நன்றியினை கொல்லும்

கோவிலுண்டு பூசை செய்ய யாரும் இங்கு இல்லை
கொள்ளி இட கூட ஒரு பிள்ளை இங்கு இல்லை

பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது

கட்டிலுக்கு வந்தவளும் என்னை விட்டு போனாள்
தொட்டில் வந்த பிள்ளைகளும் தூர தேசம் போனார்

கட்டிலுக்கு வந்தவளும் என்னை விட்டு போனாள்
தொட்டில் வந்த பிள்ளைகளும் தூர தேசம் போனார்

விட்டபடி சுற்றுதடா பூமி என்னும் பந்து
பெத்த பாசம் என்பதெல்லாம் இங்கு ஒரு பேச்சு

பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது

ஆல மரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாரும் இன்றி அழுகின்றது

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

ஆற்றினிலே நீருமில்லை
ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமெல்லாம்
நேரினிலே இன்று இல்லை

பூத்த கொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here