Movie – Sathi Sanam
Music- Deva
Singers: Unnikrishnan
Lyricist: Vairamuthu
Starring : Mahesh & Oviya
Charumathi Neethan Santhamadi Song Lyrics – சாருமதி நீதான் சந்தமடி
சாருமதி நீதான் சந்தமடி
பாருமதி நீ என் சொந்தமடி
சாருமதி நீதான் சந்தமடி
பாருமதி நீ என் சொந்தமடி
ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகம் அது
சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகம் இது
ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகம் அது
சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகம் இது
சாருமதி நீதான் சந்தமடி
பாருமதி நீ என் சொந்தமடி
உள்ளம் உன்னை நினைத்தால்
சுரந்து வரும் வெள்ளம் போல கற்பனை
சொல்லி விடத் துடித்தேன்
தமிழில் உள்ள சொற்கள் மட்டும் எத்தனை
உள்ளம் உன்னை நினைத்தால்
சுரந்து வரும் வெள்ளம் போல கற்பனை
சொல்லி விடத் துடித்தேன்
தமிழில் உள்ள சொற்கள் மட்டும் எத்தனை
காதல் சந்நிதியில் கானம் தொழுகின்றதே
கண்ணே உன் காலடியில் கண்ணீர் விழுகின்றதே
கல்லை உருக்கும் எந்தன் கானம் படித்த பின்னும்
கண்ணில் இரக்கமில்லையே
சாருமதி நீதான் சந்தமடி
பாருமதி நீ என் சொந்தமடி
ஆஆ ஆஅஅ ஆ அ அ
ஓ ஒ ஓ ஓ ஒ ஓ
நெற்றி பொட்டு வலிக்க
உன் பெயரை நித்தம் நித்தம் கத்தினேன்
ஒற்றை உயிர் துடிக்க
அழகு பெண்ணே உன்னை சுற்றி நிற்கிறேன்
நெற்றி பொட்டு வலிக்க
உன் பெயரை நித்தம் நித்தம் கத்தினேன்
ஒற்றை உயிர் துடிக்க
அழகு பெண்ணே உன்னை சுற்றி நிற்கிறேன்
கண்கள் திறந்திருந்தும் நெஞ்சில் உறக்கமென்ன
ஜீவன் துடிப்பதிலே தேகம் சிலிர்ப்பதென்ன
என்னை வெறுத்து வைத்து கண்ணில் சிரிப்பு வைத்து
பெண்ணே ரசிப்பதென்னவோ
சாருமதி நீதான் சந்தமடி
பாருமதி நீ என் சொந்தமடி
ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகம் அது
சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகம் இது
ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகம் அது
சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகம் இது
ஆஆ ஆஅஅ ஆஆ ஆஅஅ
ஆஆ ஆஆ ஆஆ