ஸ்மார்ட் ஷாப்பிங் கார்ட் கனடாவில் அறிமுகம்

0
1312
sobeys_Smart_shopping_cart1

Canada’s retail store Sobeys getting Canada’s first ever Smart Shopping Cart

நீங்கள் ஸ்மார்ட் காரை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஸ்மார்ட் ஷாப்பிங் கார்ட் ஐ கேள்விப்படுறிகிறீர்களா? கனடாவில் முதல் தடவையாக சோபிஸ் எனும் கடை ஸ்மார்ட் ஷாப்பிங் கார்ட் ஐ அறிமுகம் செய்கிறது.

 

Ontarios_smart_shopping_cart

இந்த டெக்னாலஜி ஷாப்பிங் கார்ட் பொருட்களை வாங்குபவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாது அவர்களது செலவுகளையும் குறைக்கும் என எதிர்பார்க்க படுகிறது. வாடிக்கையாளர்கள் தேவைக்கதிகமான பொருட்களையோ விலை கூடிய பொருட்களையோ அறியாமல் வாங்குவதை தவிர்க்க உதவி புரியும். வாடிக்கையாளர்கள் தாங்களே தங்களுக்கு தேவையான அளவு பொருட்களை நிறுத்து விலையை சரி பார்த்து ஷாப்பிங் கார்ட் இல் போட்டு கொள்ளலாம் . நீங்கள் வரிசையில் நிற்க தேவை இல்லை. இதனூடே பணத்தையும் செலுத்தி கொள்ளலாம் .

Smart_shopping_cart_In_Canada

இம்முறையை கையாள்வதால் கடைகளில் வேலை செய்வோர் வாடிக்கையாளர்களோடு மேலும் அதிகளவு பேசிஅவர்களுடைய சந்தேகங்களை போக்கிகொள்ள   வழி வகுக்கும் என கடை உரிமையாளர் தெரிவித்தார். மேலும் இது நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான கொள்வனவு அனுபவமாக இருக்கும் எனநம்புகிறேன்  எனவும் தெரிவித்தார்.

 

இது உங்களுக்கு தேவையான பொருட்கள் இருக்குமிடைத்தையும் இலகுவாக கண்டு பிடிக்க உதவிபுரிகிறது.  நீங்கள் வரிசை வரிசையாக தேடி திரியவோ கடையில் வேலை செய்பவருக்கு காத்திருக்கவோதேவையில்லை . இது எந்த பொருட்களை மக்கள் முதலில் எடுக்கிறார்கள் என்ற தரவுகளையும் கடை உரிமையாளர்களுக்கு வழங்குகிறது.

Sobeyssmartcart

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here